நமக்கு தெரிந்த சுதந்திரம், துங்கு மட்டுமே!!
சரித்திரம் வெற்றிப்பெற்றவர்களால் எழுதப்படுகிறது என்பது ஒரு பொதுவான கருத்துள்ளது. அது உண்மையும் கூட, இல்லையென்றால் மகாபாரதத்தில் கௌரவர்கள் தீயவர்களாகவும், இராமயணத்தில் இராவணன் தீயவனாகவும் சித்தரிக்கப்பட்டிருக்காது. மலேசியாவின் சரித்திரம் சற்று மாறுப்பட்டது. இங்கு வெற்றிப்பெற்றோர் யாரும் கிடையாது, அதனால்தான், மலேசியாவின் சுதந்திரப்பற்றிய விவாதங்கள் மலேசிய அரசியலில் புதியதொரு புயலைக் கிளப்பியிருக்கிறது. சுதந்திரத்திற்கு போராடியவர்கள் யார்? உண்மையான சுதந்திர போராட்ட வீரர்கள் யாரென்ற விவாதம் கிளம்பியிருக்கிறது. காலங்காலமாக நமக்கு கூறப்பட்டு வந்த சரித்திரத்தை இப்பொழுதுதான் கேள்வியெழுப்ப நமது அரசியல்வாதிகளுக்கு துணிச்சல் வந்துள்ளது. முன்பெல்லாம், இந்த சரித்திர தகவல்களைப் பற்றி நாம் கேள்வியெழுப்புகையில், என்னவோ ஒரு இனத்தின் மாண்பைக் குறித்து கேள்வியெழுப்பி விட்டதைப்போல பலவித மிரட்டல்கள் மேலோங்கும் (உண்மையில் இந்த மிரட்டல்களின் வழிதான் நாம் நமது உரிமைகளை இழந்துள்ளோம்). இதனாலேயே நம் மீது திணிக்கப்பட்ட "ஒழுங்குப்படுத்தப்பட்ட" சரித்திர பாடத்திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு வந்துள்ளோம்.
21ஆம் நூற்றாண்டில், கணினி யுகத்தில், இந்த மிரட்டல்கள் எல்லாம் தவிடுபொடியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, மலேசிய சரித்திரத்தின் நம்பகத்தன்மையைக் குறித்த விவாதங்களுக்கு அகரம் கொடுத்து துவக்கியவர், ஒரு மலாய்க்கார அரசியல்வாதி என்பது அதிலும் சிறப்பு. புக்கிட் கெப்போங் எனப்படும் பகுதியில், கம்யூனிஸ்டுகளுக்கும், அன்றைய மலாயாவின் பிரிட்டிசாரின் கீழ் பணியாற்றிய போலிசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கி சண்டைக் குறித்து, பாஸ் கட்சியின் துணைத்தலைவர் மாட் சாபு கருத்துக்கூற, மலேசியாவின் சரித்திரம் குறித்த விவாதங்கள் தொடங்கின. மாட் சாபுவை பல தரப்பினரும் குறைக்கூறிய பொழுதிலும், அவருக்கென்று ஆதரவும் உள்ளது. மலேசிய சரித்திரம் பிறழ்ந்துள்ளது என்ற உண்மையை பலரும் ஏற்றுக்கொண்டனர். மலேசியா அல்லது மலாயா பிரிட்டிசாரால் ஆளப்படவேயில்லை என்றுக்கூட கருத்துகள் சிலர் கூறத்தொடங்கினர்.
சேரோக் தோக்குன் கல்வெட்டு
(இந்த கல்வெட்டு சில பொறுப்பற்றவர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது)
சேரோக் தோக்குன் கல்வெட்டில் காணப்படும் பிராமி எழுத்துகள்
மலேசிய சரித்திரத்தை திருத்தி முறையே எழுத அமைந்த ஒரு தருணமாக இதனை சிலர் உற்றுநோக்குகின்றனர். இருப்பினும் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எதிர்ப்புகள் நிச்சயம் கிளம்பும். ஆனால், மலேசியர்களிடையே தோன்றியுள்ள அரசியல் முதிர்ச்சியில், அதனை நாம் நடவாத காரியம் என்று மறுத்துவிடவும் முடியாது. இவ்வேளையில், மலேசியாவில் நமது தமிழர்களின் சரித்திரம், பால்மரங்களோடு தொடங்கியது என்றே கூறப்பட்டு வந்தது. அதனை நாமும் நம்பி வருகின்றோம். ஆனால், இந்த மலையகத்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்ததற்கான ஆதாரச்ச்சான்றுகள் பல உள்ளன. சோழ மன்னனின் கடற்பயணம், பூஜாங் பள்ளத்தாக்கில் வந்து நின்றது, அங்கு தமிழர்கள் வந்திறங்கினர் என்பதுதான் நம்மில் பலர் அறிந்த சரித்திர தகவல். நமக்கு பின்னால் எத்தனைப் பேருக்கு அதுக்கூட தெரியப்போகிறது என்று நமக்கு தெரியாது. ஆனால், அதற்கும் முன்பாக தமிழர்கள் இந்த மலையகத்தில் இருந்துள்ளனர். அதற்கு சான்றாக, பினாங்கில் உள்ள சேரோ தோக்குன் எனப்படும் இடத்தில் காணப்படும் கல்வெட்டையும் அதில் காணப்படும் பிராமி எழுத்துகளையும் சான்றாக கூறுகின்றார் முனைவர் ஜெயபாரதி.
அந்தளவுக்கு சரித்திரத்தை நாம் மீட்டுக் கொண்டுவர முடியவில்லை என்றாலும், குறைந்தது மலாயாவின் சுதந்திரத்திற்கு போராடிய நம்மவர்களது சரித்திரத்தையாவது மீட்டுக் கொண்டுவர வேண்டும். பிரிட்டிசார் தென்னிந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை இந்நாட்டிற்கு சஞ்சிக்கூலிகளாக அழைத்து வந்தனர் என்பது உண்மைதான். ஆனால், அதற்கு பிறகு இந்நாட்டில் நமது சரித்திரம் என்னவென்று நம்மால் கூற முடியுமா? அதற்கு பிறகு மலேசிய தமிழர்களின் சரித்திரம் என்று இதுவரை கூற்ப்படுவது, மஇகா என்ற அமைப்பைப் பற்றியும், சுதந்திர பிரகடனத்தைப் பெறுவதில் மஇகாவின் தலைவர்கள் ஆற்றிய பங்கைப் பற்றியும்தான். சுதந்திர போராட்டம் என்று இங்கு கூறப்படுவது மலாயன் யூனியனுக்கெதிராக மலாய்க்காரர்கள் நடத்திய போராட்டம், அதற்கு பிறகு தோன்றிய அம்னோ என்ற அமைப்பு. அதன் மூலமே சுதந்திரம் பெறப்பட்டது என்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.
ஜப்பானியர்கள் இந்த நாட்டை ஆளுகையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்தான் சயாம் மரண இரயில் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழர்கள்தான் பெரும்பாலான கொடுமைக்குள்ளானர்கள். ஆனால், நமக்கு கூறப்படும் சரித்திரத்திலோ, இந்தியர்கள் ஒரு சிறு பிரிவினரே என்ற வகையில் கூறப்படுகின்றது. ஜப்பானியர்கள் இங்கு வருவதற்கு முன்பு நடத்த போராட்டங்கள், மறியல்கள், வேலைநிறுத்த போராட்டங்கள் போன்றவற்றை நாம் அதிகாரப்பூர்வ சரித்திர புத்தகத்தில் எங்கேயும் காணமுடியவில்லை.
சயாம் மரண இரயில் பாதை நிர்மாணிப்பில் தமிழர்கள்
மலாயாவில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்களுக்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் தலைமையிலான இந்திய தேசிய இராணுவமும் ஒரு அமைப்பாக இருந்தது. தமிழர்களை சஞ்சிக்கூலிகளாக கொண்டு வந்த அடிமைகளைப்போல் நடத்திய வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முளைத்தன. தொழிலாளர்களுக்கெதிராக நிகழ்ந்த கொடுமைகளை தொழிற்சங்கங்கள் தட்டிக்கேட்டன. தமிழ் தொழிலாளிகளை, கள்ளுக்கு அடிமையாக வைத்திருந்ததை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். தொண்டர் படையென்ற அமைப்பு சமூக சீர்திருத்தத்தை சாதரண தனிமனிதனிடமிருந்து தொடங்கியது. அதற்கும் மேலாக, இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, மலாயாவின் பிரிட்டிசாருக்கு எதிராக போர் புரிந்து, ஆயுதம் வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டு, 1949 மே மாதம் 4ஆம் தேதி, பூடு ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட தொழிற்சங்க முன்னோடி எஸ்ஏ கணபதி யாரென்று நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? தொழிலாளிகளை தற்காக்கிறார்; முதலாளிகளுக்கு எதிரானவர் என்பதால் பிரிட்டிசாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட தொழிற்சங்க போராளி வீரசேனனை எத்தனைப் பேருக்கு தெரியும்? இவர்கள் இருவரின் கீழ் செயல்பட்ட தொழிற்சங்கம், சுமார் 89 வேலை நிறுத்த மறியல்களை தோட்டங்களில் நடத்தின. அதனால்தான் இவர்கள் இருவரும் பிரிட்டிசாரால் வெறுக்கப்பட்டனர்.
தனது 24வது வயதிலேயே தூக்கில் தொங்கிய மலாயா கணபதி
'
மலாயா வீரசேனன் (வீரசேனன் சுட்டுக்கொள்ளப்பட்ட செய்தி)
இவர் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான பொழுது இருபது வயதுக்கூட ஆகவில்லை
தொழிலாளர் வர்க்கத்திற்காக பிரிட்டிசாரை எதிர்த்து போராடிய இந்த மாவீரர்களின் பெயரை நமது சரித்திரத்தில் எங்காவது படித்ததாக யாருக்கவது ஞாபகம் உள்ளதா? மாட் கிலாவ், தோக் ஜங்கூட் என்ற மலாய்க்காரர்கள் பிரிட்டிசாரைப் பகைத்துக் கொண்டமைக்கு அவர்களுக்கு தனிப்பட்டக் காரணங்கள் இருந்தன. ஆனால் இந்த கணபதிக்கும், வீரசேனனுக்கும் இருந்ததெல்லாம் ஒரே காரணம்தான், தொழிலாளி வர்க்கம் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதுதான்; அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காக அவர்களுக்கு கிடைத்த பரிசு, மரணம். தொழிலாளர் வர்க்கத்திற்காக, சுதந்திரத்திற்காக போராடி வீரமரணமுற்ற இந்த மாவீரர்களின் பெயர்கள் நமது பிள்ளைகள் படிக்கக்கூடிய சரித்திர நூலில் இருக்க வேண்டாமா? நமது அடுத்த தலைமுறையினருக்கு இந்த கணபதி, வீரசேனன் யாரென்று தெரிய வேண்டாமா? இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக எங்கள் தமிழர்களும் உயிர் நீத்துள்ளனர் என்று நாம் கூறுவதற்கு சான்றுகள் வேண்டாமா?
நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட, நம்மவர்களால் மறக்கப்பட்ட சரித்திரத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு உதவி செய்யாவிடினும், உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம். நாட்டின் சரித்திரம் திருத்தப்பட வேண்டும் என்று கோருபவர்களின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளதா, இல்லையா என்பதில்லை எனது வாதம். மறைக்கப்பட்ட இச்சரித்திரத் தகவல்களை, மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எனது வாதம். ஆனால், அதற்கெதிரான போக்கில் "ஒழுங்குப்படுத்தப்பட்ட" சரித்திரம்தான் எங்களுக்கு வேண்டும் என்று கூறித்திரியும் மஇகா இளைஞர் பிரிவினரை நான் "இனத்துரோகிகள்" என்று குறினால் அது மிகையாகுமா?
- தொடரும் -
dei pundamavane...mudedaa...
ReplyDeleteவாழ்க மஇகா-ன்னு சொன்னா என்ன சொல்லுவிங்க ப்ரோ?!
DeleteDei nee yaarene kandu pudichaachi! Periya paruppune nenappu unakku daa... Periye aappu kaathirukkudi.... Appe teriyum, yaar pu*****van ne...
Delete