Friday, October 28, 2011

ஏழாம் அறிவு - ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாய காண வேண்டிய திரைக்காவியம் - எனது விமர்சனம் / 7-Aam Arivu - A Movie That Every Tamil Should Watch - My Review



ஏழாம் அறிவு - ஒரு திரைக்காவியம்

இரமணா, கஜினி போன்ற படங்களை இயக்கிய, ஏஆர். முருகதாஸ் இயக்குகிறார் என்ற காரணத்திற்காக எழாம் அறிவு என்ற திரைப்படத்தைப் பார்க்க சென்றேன், ஆனால், நான் கண்டது தமிழ் திரைக்காவியம் ஒன்றை. தமிழன் தனது சரித்திரத்தை உணரும் பட்சத்தில் மட்டும்தான் தலைநிமிர்வான் என்பது எனது வாதம். தமிழ்ப்பள்ளிகளில் பாடத்திட்டங்களில், தமிழ் சரித்திரத்தையும் கற்பிக்க வேண்டும் என்பது எனது கருத்தும் கூட. எனது முந்தைய பதிவுகளிலும் நான் இதனை கூறியிருக்கிறேன். ஆனால், அது போன்ற தமிழ் சரித்திரத்தை, திரைப்படத்தில் காட்டும் பொழுதுதான் அது பெரும்பாலான மக்களை சென்றடைகிறது என்பது, ஏழாம் அறிவு படத்தின் மூலம் தெளிவாகிறது.

போதி தர்மன் என்ற பல்லவ இளவரசன் (தமிழன்) சீன தேசத்திற்கு பயணம் செய்வதாக தொடங்குகிறது படம். அதற்கு பிறகு வரும் காட்சிகள், ஒரு திரைப்படம் என்பதை விட, ஒரு செய்தி படமாகத்தான் (Documentary) தெரிகிறது. போதி தர்மன் சீனாவிற்கு சென்று, அங்கே தமிழர்களின் மருத்துவம், தற்காப்பு கலை, மற்றும் நோக்கு வர்மம் போன்ற அரும்பெரும் கலைகளை பரப்புகின்றார். சீனாவை தாக்கும் கொடிய நோயை தீர்க்க, போதி வர்மன் தன்னுடைய மருத்துவ திறனைக் கொண்டு கட்டுப்படுத்துகிறார். அதற்கு பிறகு, இன்று உலகமே வியந்து பார்க்கும் ஷாவோலின் குங்ஃபுவையும் அங்கே பரப்புகிறார். இறுதியில் தனது தாய் மண்ணுக்கு திரும்ப விரும்பும் போதி வர்மனை, அங்குள்ள சீனர்கள், விஷம் கொடுத்து கொன்று, அங்கேயே புதைக்கிறார்கள். அதுதான் சரித்திர பின்னணி. அதற்கு பிறகு, போதி வர்மனை தெரியுமா என்று பலரிடம் கேள்வியெழுப்புகிறார்கள். அக்கேள்வி கேட்கப்பட்ட அனைத்து தமிழர்களும், யாரென்று தெரியவில்லை என்று சொல்ல, கேள்வி கேட்கப்பட்ட அனைத்து சீனர்களும், போதி தர்மர், தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்; அவர்தான் ஷாவோலின் குங்ஃபுவை உருவாக்கியவர் என்று கூறுகின்றனர். இந்த முதல் பகுதியிலேயே, நச்சென்று தமிழர்களை தலையில் குட்டுகிறார் இயக்குனர்.

போதி தர்மன்

அதற்கு பிறகு, திரைக்கதை ஆரம்பிக்கின்றது. திரைக்கதையை அலசி ஆரய்வதற்கு இல்லை இந்த விமர்சனம். ஆனால், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை ஆழமாக ஆராய்வதற்கு. ஏழாம் அறிவு திரைப்படத்தின் மிகப்பெரும் பலம், படத்தின் வசனங்கள். படத்தில் வரும் வசனங்கள், ஒரு தமிழனுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும், தமிழின உணர்வை தட்டியெழுப்புகிறது. போதி வர்மன் என்ற தமிழ்னை பல தமிழர்களுக்கு தெரியாது என்று குத்தலாக கூறும் தொடக்க கட்டமே, பல தமிழர்களின் தமிழின உணர்வுக்கு சவால் விட்டதாக அமைகிறது. உலகத்தில் முதல் நாகரீகம் தமிழனுடையதுதான்; உலகிற்கே வீரத்தையும், நாகரீகத்தையும் கற்றுக்கொடுத்தவன் தமிழன் தான்; ஆனால் இன்று அந்த வீரத்தையும், நாகரீகத்தையும் அருங்காட்சியகத்தில் வைத்து விட்டவனும் தமிழன்தான் என்று கதாநாயகி ஸ்ருதி ஹாசன் விளக்குவது மிகச்சிறப்பு. ஸ்ருதிஹாசன் நடிப்பில் மட்டுமல்ல, வசனத்தை கூறும் பொழுதும் நமது நெஞ்சோடு நின்று விடுகிறார். எடுத்துக்காட்டுக்கு, "போதி வர்மன் போன்றவர்களை, கடவுளாக காணாமல், அறிவியலாளராக பாருங்கள்!" என்கிறார். முன்பு யாரோ ஒருவர் கூறினார், "முருகன் ஒரு மிகப்பெரிய, அறிவாய்ந்த அறிவியலாளர்" என்று; ஸ்ருதி சொன்னதை கேட்கையில் அந்த நினைவு வந்தது.

திரைப்படத்தில் வரும் பல வசனங்கள் தமிழ் உணர்வை தட்டியெழுப்புகின்றன. தமிழை குரங்குடன் ஒப்பிடும் ஒருவரை தாறுமாறாக திட்டி தீர்த்து, "800 வருஷத்துக்கு முன் வந்த, இங்கிலிஷ் இனிக்குது, 20000 வருஷத்துக்கு வந்த தமிழ் கசக்குதா?" என்று ஸ்ருதி கூறும் கட்டம், எனது உடல் சிலிர்த்த அனுபவம். குறிப்பாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்துள்ளார் இயக்குனர். "ஈழத்தில் நடந்தது துரோகம், ஒரு தமிழனை அழிக்க 9 நாடுகள் இணைந்து செய்த சதி" என்று இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பை சுட்டிக்காட்டி. என்று சூர்யா கூறும் கட்டத்தில், ஒரு பச்சைத்தமிழனின் உணர்வு வெளிப்படுகிறது. இலங்கையில் தமிழனை அடித்தார்கள் என்று சூர்யா கூறும் வசனத்தை மலேசிய தணிக்கை வாரியம் தணிக்கை செய்ததற்கான காரணம் தெரியவில்லை, இருப்பினும் சப்டைட்டிலில் அந்த வசனத்தைக் காண முடிந்தது. இறுதி கட்டத்தில், தமிழர்கள் தமது சரித்திரத்தை அறிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தை சூர்யாவின் மூலம் இயக்குனர் சொல்ல வைத்திருப்பது சிறப்பு. "மஞ்சளை, சாமி என்று கூறாதீர்கள், அது கிருமிநாசினி என்பதைக் கூறி உங்கள் பிள்ளைகளை வளருங்கள்," "வேப்பிலை மரம் நடுங்கள், அது தெய்வத்திற்காக அல்ல, உங்கள் சுகாதாரத்திற்காக" என்று கூறும் கட்டத்தில், பெரியாரிசம் வெளிப்படுகிறது.போகி பண்டிகை என்ற பெயரில், விலைமதிப்பில்லா ஓலைச்சுவடிகளை எரிக்க செய்தது நமது இனத்தை அழிக்க செய்யப்பட்ட துரோகம்; அது வடநாட்டவர்களின் சதி என்பதை ஒரே வரியில், தமிழர்களுக்கும் போகிக்கும் சம்பந்தமில்லை என்று இயக்குனர் கூறியது சிறப்பு. அதேப்போல விலைமதிப்பில்லா தமிழர் சரித்திரத்தை யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததின் வழி சிங்கள பேரினவாதிகள் அழித்த வரலாற்றையும், ஒரு திரைப்படத்தில் முதன்முதலாக மிக தெளிவாக கூறியதும் இந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில்தான்.

இத்திரைப்படத்திற்கு சூர்யா, ஸ்ருதியைத் தவிர வேறு யாரும் நாயகன், நாயகியாக பொருந்தியிருக்க மாட்டார்கள். அந்த இருவரின் தந்தையர்களிடமும் இருக்கும் தமிழ்ப்பற்று, இந்த இரு கலைஞர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வேறு யாரேனும் இருந்திருந்தாலும், இவ்வளவு ஆத்மார்த்தமாக நடித்திருக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். ஒரு வேட்கைக் கொண்ட இளம் தமிழினத்தை இந்த இருவரின் வழி காணமுடிகின்றது.

ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக இத்திரைப்படத்தைக் கண்டு, உண்மை தமிழர் சரித்திரத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதுதான் எனது ஆவல். பெரியாரால் திருத்த முடியாத இத்தமிழினத்தை, இதுப்போன்ற சரித்திர பின்னணிகள் கொண்ட நல்திரைப்படங்களின் மூலம் கொஞ்சமேனும் மாற்றலாம். ஒன்று நிச்சயம், இத்திரைப்படத்தை காணும் மலேசிய தமிழர்களில் குறைந்தது 80 விழுக்காட்டினர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்குத்தான் அனுப்புவார்கள். தமிழர்களின் தூங்கிக்கிடந்த இனவுணர்வை தட்டியெழுப்பிய இயக்குனருக்கு பாராட்டுகள்.

7-Aam Arivu - A Movie That Every Tamil Should Watch
My Review

I wanted to watch this movie, because the Director had given two good movies, named Ramana and Ghajini previously. What I expected was a common Tamil movie with Entertainment elements, but I came out of the screen with full satisfaction of watched an Infotainment Tamil Movie. I had a view that, only by studying the History, Tamils can excel. I had stated these in some of my earlier blog posts. However, instead of reading the History books, it is always better to know the History through the Movies like this. And the historical points really reaches the masses through the Tamil Movie. That's how the US infiltrate the minds of the people, as though, they are the saviors of human kind, through the Hollywood movies! And I am glad that, good message for Tamils will reach through this 7 Aam Arivu movie.

A Movie starts with the journey of Pallava Prince, Bodhi Tharman, A Tamil, to Nanyang, China from his homeland of Kanchipuram of Tamil Nadu. The first part of the movie can be considered as documentary rather than a entertainment movie. Bodhi Tharman spread the Tamils arts of medicine and martial arts in China. Bodhi Tharman healed the deathly decease that spread the land of China in the 6th Century through his medical knowledge. Later, the Martial Arts that taught by Bodhi Tharman becomes Shao Lin Kung Fu. It is apparent that, Shaolin Kung Fu, is originated form Tamil Nadu. Bodhi Tharman also introduced the art of Hypnotism in China. The Art of Hypnotism known as "Nokku Varmam" in Tamil. Years later, when Bodhi Tharman wants to return to his homeland, the Chinese villagers poisoned him and buried him there, so that their land will be blessed forever. That's the end of the background of Bodhi Tharman. Movie continues with question being asked to many, if they know who is Bodhi Tharman. Not surprisingly, none of the Tamil has any idea of who is Bodhi Tharman. Surprisingly, all the Chinese people interviewed, addressed Bodhi Tharman, as Great Kung Fu Master from South India. That is the first slap for the Tamils from the Director.

Then the movie continues. I don't want to discuss much on the contents of the movie and would like to discuss more about the message forwarded through the movie. The dialogues in the movie particularly, really tickles the Tamil nationalistic feeling within a Tamil. When the Heroine, Shruthi Hasaan mentions, "The first civilization in the world belongs to the Tamils. Tamils are the one who taught the meaning of Civilization and Bravery to the world. But, now the Tamils let all their glories to sleep in Museums!" is point to ponder for Tamils at large. Shruthi really left a mark in our hearts with the bold dialogues. At one point she also reminds "to view people like Bodhi Tharman as Great Scientist, instead of praying them as Gods!" . This reminded me of someone's quote, where the Lord Murugan known as a Great Scientist.

The Dialogues in the movie really plays a vital role. At one point, when a Foreign Educated Scientist chiding Tamil Language, by comparing it to a monkey, the Heroine explodes and asks, "You are glorifying a Language (English) came just 800 years ago, but chiding a Language that exist over 20,000 years?". At another point the hero of the movie, pointing out the "Tamils in Sri Lanka was defeated by the 9 evil nations through the betrayals. and nothing else!" The dialogues referring to the Genocides being committed on Tamils by Sri Lankan Govt really makes one to thrill. I don't understand the need for Malaysian Censor Board's to censor the Surya's dialogue where he said, "Tamils beaten and killed in Sri Lanka!" Glad that the dialogue still can be read from the subtitles. I am puzzled on why Malaysian Govt is defending the war criminal Sri Lanka. At the climax, Surya's bold dialogue on why Tamils should know their history is really inspiring. The dialogue, "Teach your children about the power of the Neem and Turmerics for health, instead of telling them, it is religious related!" is purely expression of Periyarism. The movie went on to clarify that, the celebration of Boghi, before a day of Ponggal introduced to destroy the priceless ancient information of Tamils written on Palm Leafs. And this is the first time a Tamil movie speaks about, on why Jaffna Library razed down on fire. Because the Sri Lankan Singhalese Regime wanted to destroy the priceless information of Tamils in there.

I am not surprised that main characters of the movie played by Surya and Shruthi Hasaan, as fathers of the both are known to be Tamil patriots. I can't see any other actors that can play the roles as effective as both of them.

I feel that, every Tamil should watch the movie, to know the real history of their race. Periyaar might failed in bringing the reformation to this race, yet movies of this kind shed the light on the hope that the race still can be reformed to the least. I am convinced of one thing, Malaysian Tamil parents who watch this movie certainly will send their kids to Tamil schools. And I would like to thank the Director AR Murugadoss for his hardworks that tickled the Tamil Nationalistic feeling within an every Tamil.

- Satees-