நேர்மையான தேர்தலைக் கோரும் அமைப்பான, பெர்சேவிற்கு தலைமையேற்றுள்ள டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசனை சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்து, பெர்சே பேரணியை சிறுமைப்படுத்தி, தேசிய முன்னணி தலைவர்களும், தேசிய முன்னணிக்கு ஆதரவான ஒரு சிலரும் அறிக்கை விடுத்து வந்தனர். இன்னும் ஒரு சிலர், ஒரு படி மேலே போய், டத்தோ அம்பிகாவிற்கெதிராக போலீஸ் புகார்களையும், டத்தோ அம்பிகாவின் டத்தோ பட்டத்தை பறிக்க வேண்டுமென்றும், அவரின் குடியுரிமையை ரத்து செய்யவேண்டும் என்றும் குரல்கொடுத்தனர். ஆனால், இவ்வாறு கூறியவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தை ஏமாற்றி இதுநாள் வரையில் பிழைப்பு நடத்தி வந்தவர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மஇகாவின் தலைவர்களோ இந்தியர்கள் பெர்சே போராட்டத்தை ஆதரிக்கவில்லை, அவர்கள் அம்பிகாவின் பேச்சை கேட்கவில்லை என்று கூப்பாடு போட தொடங்கி விட்டனர். மஇகாவின் தேசியத்தலைவர் முதற்கொண்டு, சாதாரண கிளைத்தலைவர் வரையில் இதே கூப்பாடுதான். பல்லினக்கட்சி என்று கூறிக்கொண்டிருந்த மமுக தலைவர் டத்தோஸ்ரீ கேவியசோ, திடீர் ஞானோதயம் வந்து, இந்தியர்கள் அம்பிகாவை ஆதரிக்காதீர்கள் என்கிறார். ஆனால், இவர்கள் அனைவரும் கூறுவதைப் போல இந்தியர்கள் பெர்சே போராட்டத்தை புறக்கணிக்கவில்லை. பெர்சே பேரணியில் பல இந்தியர்கள், குறிப்பாக கற்றுத்தெளிந்த இளைய தலைமுறையினரின் பங்களிப்பை தெளிவாக நாம் காணமுடிந்தது. காலங்காலமாக ஆட்டுக்கறி, பரிசுக்கூடை என்று சமுதாயத்தை ஏய்த்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த சமுதாயம் விழித்துக் கொண்டு விட்டது. அடுத்த தலைமுறை இந்தியர்கள் மறுமலர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளனர். ஆகவே தங்களின் பிழைப்புக்கு ஆபத்து என்பதால், அம்பிகாவையும், பெர்சே அமைப்பையும் கண்டு அஞ்சி நடுங்கி சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கின்றனர்.
சனிக்கிழமை கோலாலம்பூரில் கூடிய மக்கள் படை, மலேசிய நாட்டிற்காக, இன பாகுபாட்டை மறந்து மலேசியர்கள் என்ற அடிப்படையில் கூடினர். தேசிய முன்னணி காலங்காலமாக நடத்திவரும் இன அரசியலுக்கு இது ஒரு சாவுமணி என்பது மட்டும் தெளிவாகின்றது. டத்தோ அம்பிகாவை எதிர்த்து போலிஸ் புகார் செய்வதாலும், அறிக்கை விடுவதாலும் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது. இந்தியர்களை கேவலப்படுத்தும் இண்டர்லோக நாவலுக்கெதிராகவும், மற்ற இனத்தவர்களை அச்சுறுத்தும் இப்ராகிம் அலிக்கெதிராகவோ போராட முதுகெலும்பு இல்லாதவர்கள், மலேசிய மக்களுக்காக போராடும் அம்பிகாவை எதிர்ப்பதன் உண்மை நோக்கம் என்னவென்பது மக்களுக்கு தெரியும்.
வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன், ஒரு சமுதாயத்திற்காக மட்டும் போராடவில்லை. மலேசிய திருநாட்டின் மக்களாட்சி முறை மறுசீரமைக்கப்பட்டு, மறுமலர்ச்சி ஏற்பட போராடும் பெர்சே அமைப்பிற்கு தலைமையேற்றுள்ளார். அவரை இந்தியர் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் பார்க்காமல், ஒரு மலேசியர் என்ற முறையில் நோக்குவதுதான் சிறப்பு. அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், முதற்பெண்மணியுமான மிட்சல் ஒபாமா ஆகியோரிடமிருந்து சிறந்த் பெண்மணிக்கான விருதுபெற்று மலேசிய நாட்டின் பெண்களுக்கு பெருமைத்தேடி தந்தவர் டத்தோ அம்பிகா. அவரை பாராட்டுவதுதான் சிறப்பு. பெர்சே அமைப்பிற்கு தலைமையேற்றுள்ள அவரை, அந்த அமைப்பிற்கு ஆதரவுத்தரும் அனைவருமே ஆதரிக்கின்றனர். பெர்சே பேரணியின் போது அது மிகத்தெளிவாக தென்பட்டது. டத்தோ அம்பிகாவிற்கெதிராக கொலை மிரட்டல் மட்டுமின்றி, அவரை களங்கப்படுத்தி பல சுற்றறிக்கைகளியும் பெர்காசா போன்ற அமைப்பினர் வெளியிட்டு வருகின்றனர். இதையெல்லாம் மீறி போராட்டத்தில் உறுதியாக இருக்கும் அவ்வீர பெண்மணிக்கு சமுதாயம் தலைவணங்கட்டும்.
சத்தீஸ் முனியாண்டி
பினாங்கு ஜசெக சோசாலிஸ இளைஞர் பகுதி
ஆட்சிக்குழு உறுப்பினர்
Summary :
BN Indian Leaders Worried of Ambiga's Growing Influenc
BN Indian Leaders are threatened by Ambiga's growing Influence! Recently, Top BN Leaders including MIC President Dato G Palanivel and the Deputy Ministers of MIC claimed Indians does not support Bersih and they rejected Dato Ambiga Sreenivasan's call for electoral reforms. So called Multiracial party PPP's Presdent Dato Seri Kavyeas had attacked Dato Ambiga personally, and specifically called upon Indians in the country to boycott Ambiga's call and the Bersih rally. There were few Pro-BN groups which called for revocation of Ambiga's citizenship.
Despite the continous attacks on Ambiga and Bersih on Mainstream Medias, Saturday's Bersih rally was a success. Claims of BN Indian leaders that, Indians rejected Bersih was a clearly contradicting, since many Indians were there on the streets of KL on Saturday. They all gathered there as one race, Malaysian race! MIC and its partners might thinking Indians are still in their favour, and all that they have to do to get their votes is to give them some mutton curry and few hampers. Those who participated in the Saturday rally was relatively Young and Educated group. Clearly they want reform in this nation called Malaysia. Indians support for Bersih means, end of business for these few people who lives on the Indians ignorance for all this while.
The crowd that gathered in Kuala Lumpur does not identify them as Malays, Chinese or Indians but they identified themselves as Malaysians. This is political reality which BN find difficult to accept. People, especially the young ones has rejected BN's racial policy for once and for all. This might echoed in next general elections too. These people who are opposing Dato Ambiga Sreenivasan now, were strangely quite when Ethnic Indians of Malaysian were insulted in the Novel Interlok and the Novel was made as a compulsory text book for SPM students. These people has no guts, and are spineless to fight racist Perkasa and the President Ibrahim Ali, but attacking Ambiga Sreenivasan for no reason. What is their motive behind these acts? People know the answers.
Dato Ambiga, Former BAR Council President does not fight for any single race in Malaysia. She is fighting for a cause which affect each and every one of the Malaysians. She is heading a movement which is calling for Clean and Fair Electoral Democracy system. It is unwise to shrink our views and looking Ambiga as an Indian. Dato Ambiga is a Malaysian, and she should be addressed so and not to the ethnic group she belongs to. Dato Ambiga Sreenivasan had received "Most Courageous Woman Award" from the US State Secretary Hillary Clinton and US First Lady Mitchell Obama for her tireless and courageous works. She had made Malaysian women proud with the Award. She only can be credited for that. Malaysians regardless of their race supporting Bersih's cause are supporting Ambiga. We could see that clearly during the Bersih 2.0 rally. Few parties including PERKASA has been circulating newsletters attacking and threatening this brave lady named, Ambiga Sreenivasan. Despite all that, this lady is keep fighting for a Malaysian cause. She should be only praised by community for her works.
Satees Muniandy,
DAPSY Penang