Tuesday, April 2, 2013

கேலாங் பாத்தா பிரகடனம் – மலேசிய இந்திய சமுதாயத்தை ஆற்றல் மிக்க சமுதாயமாக்கும் வியூகங்களும்; தூரநோக்கு திட்டங்களும்


\

1.   நாடற்ற மலேசிய இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனையை, மத்தியில் மக்கள் கூட்டணி ஆட்சியமைத்த 100 நாட்களுக்குள் தீர்வு காண்பது


2. தேசிய நீரோட்டத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக இடம்பெயர்ந்த தோட்ட பாட்டாளிகளுக்கு தேசிய வீடமைப்பு வாரியம் அமைத்து, வாழ்வதற்கு உகந்த வீடமைப்புத் திட்டங்களை செயற்படுத்துதல்.

3. நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் முழு உதவிப்பெற்ற தமிழ்ப்பள்ளிகளாக மாற்றப்படும் அதேவேளையில் தேசிய பள்ளிகளுக்கு ஈடான கட்டமைப்புகளை தமிழ்ப்பள்ளிகளும் கொண்டிருப்பதை உறுதி செய்தல்

4. பள்ளி படிப்பை முடிக்காத, குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த இளையோருக்கு சிறப்பான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் தொழில்திறன் பயிற்சி திட்டங்கள் அறிமுகம் செய்தல்

5.  இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை எற்படுத்தித் தருவதோடு, குறைந்தபட்ச ஊதியமாக 1100 ரிங்கிட்டை நிர்ணயிப்பதன் வழி குறைந்த வருமானம் பெறும் இந்தியர்களின் நிலையை உயர்த்துதல்

6.   பொதுச்சேவைத்துறை, நகராண்மைக் கழகங்கள், அரசுசார் நிறுவனங்களில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

7. இந்து ஆலயங்கள், இடுகாடுகள் அமைந்திருக்கும் நிலங்களை, அவர்களுக்கே ஒதுக்குதல். அப்படி மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகையில் முறையான நிலத்தை அடையாளம் கண்டு ஒதுக்குதல்.

8.  சிறுதொழிலில் ஈடுபடும் இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்திய பெண்கள், இளையோர் மற்றும் வீட்டிலிருந்து செயல்படும் சிறுதொழில் முனைவர்களுக்கு சிறப்பு சிறுதொழில் கடனுதவி திட்டம் மற்றும் நிதியுதவி திட்டங்களை அறிமுகம் செய்தல்.

9. சுதந்திரமான காவல் துறை புகார் ஆணையம் ஒன்றை அமைப்பது; போலீஸ் காவலில் மரணங்களுக்கு ஒரு முடிவைக் காணுதல்

10. இந்தியர்களின் சொத்துடமையை அதிகரிக்க ஒரு சிறப்பு நிதியத்தை அமைத்தல்

11. நகரங்களில் வாழும் இந்தியர்களின் வறுமை நிலை மற்றும் சமூகப் பிரச்சனைகளை ஆய்வுக்குட்படுத்தி கையாள சிறப்பு ஆணையம் ஒன்றை அமைத்தல்

12. தனித்து வாழும் தாய்மார்களின், பொருளாதார நிலை, குறிப்பாக வீட்டுடமைத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கைகளை வகுத்தல்

13. தோட்ட பாட்டாளிகளின் பிள்ளைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பயில தங்கும் வசதிக் கொண்ட பள்ளிகளை அமைத்தல்; தற்பொழுதுள்ள அவ்வாறான பள்ளிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

14. மக்கள் நலனுக்கெதிரான அனைத்து சட்டங்களையும் அகற்றுதல், அனைத்து விதமான பாகுபாடுகளைக் களைதல்.

31 மார்ச் 2013
கேலாங் பாத்தா

No comments:

Post a Comment