Monday, June 27, 2011

டத்தோ அம்பிகாவைப் பற்றி குறைக்கூற கேவியசுக்கு தகுதியில்லை!! பினாங்கு ஜசெக சோஸியலிஸ்ட் இளைஞர் பிரிவு


நீதியான, நேர்மையான தேர்தலுக்கான கூட்டமைப்பான பெர்சேவின் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசனை, தனது கட்சிக்கூட்டத்தில் மிகக்கடுமையாக சாடியிருக்கும் முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ கேவியசுக்கு, பினாங்கு மாநில ஜசெக சோஸலீஸ்ட் இளைஞர் பிரிவு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அம்பிகா யாருக்கும் உதவாதவர் என்றெல்லாம் வசைப்பாடியிருக்கும் கேவியசின் கூற்றில் சிறிதும் அடிப்படையில்லை. உலக அரங்கில் மலேசியாவிற்கும், மலேசியத் தமிழர்களுக்கு பெருமைத் தேடித்தந்திருக்கும் டத்தோ அம்பிகா சீனிவாசனை தரம் தாழ்ந்து விமர்சிக்க கேவியசிற்கு சிறிதும் தகுதியில்லை. டத்தோ அம்பிகா சீனிவாசனை இவர் தாக்கியிருப்பது, இவருக்கும் வழக்கறிஞர் மன்றத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையை மையப்படுத்தியதா என்ற சந்தேகத்தையும் தூண்டுகிறது.

டத்தோ அம்பிகா யாருக்கும் உதவாதவர் என்று கூறியிருக்கும் கேவியஸ், தான் துணையமைச்சராக இருந்த காலத்தில் எத்தனைப் பேருக்கு உதவி செய்துள்ளார் என்று விளக்குவாரா? அடிக்கடி பரபரப்பான அறிக்கைகளை விடுத்து அரசியலில் தாக்குபிடிக்கும் அரசியல்வாதியான கேவியசிற்கு, சுய சிந்தனையோடு நாட்டின் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு பெண்மணியை குறைக்கூறுவது மிகவும் கண்டனத்திற்குறியது

கடந்த காலங்களில் குறிப்பிட்ட அரசாங்கத்தில் இருந்த இந்திய தலைவர்களைக் குறைக்கூறி மலிவு விளம்பரம் தேடியவர் இந்த கேவியஸ். அதேப்போல தனது கட்சியிலிருந்து ஒரு இந்திய இளைஞர் துணையமைச்சராகி இந்தியர்களிடம் பிரபலமானார் என்றவுடன் அவரை எப்படி ஓரங்கட்டினார் என்பதை நாடே பார்த்தது. பல இந்திய தலைவர்களைக் குறைக்கூறிய கேவியஸ், இந்தியர்களுக்கு என்னதான் செய்தார் என்று கேட்டால், அவருக்கே பதில் கூற தெரியாது.

அரசியலில் இருந்து ஓரங்கட்டுப்பட விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி அறிக்கை விட்டு வரும் கேவியஸ், தனது அறிக்கைகளை சரியாக விடுத்தல் நல்லது. நீதிமிகு, நியாயமான தேர்தல் நடக்க வேண்டும் என்ற அர்த்தமுள்ள கோரிக்கையை பினாங்கு ஜசெக சோஸ்லீஸ்ட் இளைஞர் பிரிவு வரவேற்கிறது.

சத்தீஸ் முனியாண்டி

பினாங்கு ஜசெக சோஸ்லீஸ்ட் இளைஞர் பிரிவு

ஆட்சிமன்ற செயற்குழு உறுப்பினர்

0164384767

No comments:

Post a Comment